உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

பெண்ணாடம் மணல் குவாரியில் விதிமுறை மீறல் : சாலை மறியலில் ஈடுபட கிராம மக்கள் முடிவு

திட்டக்குடி : 

               பெண்ணாடம் வெள்ளாற்று குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். திட்டக்குடி வெள்ளாற்றில் பெண் ணாடம், முருகன்குடி, இறையூர், நெய்வாசல், வதிஷ்டபுரம் பகுதிகளில் பொதுப்பணித்துறை சார்பில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு லாரி, டிராக்டர் மற்றும் டயர் வண்டிகள் மூலம் மணல் ஏற்றி செல்ல அரசு அனுமதி வழங்கியுள் ளது. பெண்ணாடம் குவாரியில் தினமும் 120க்கும் மேற்பட்ட லாரிகள் மணல் ஏற்றி செல்கின்றன.

                  தண்ணீர் ஓடும் பாதையில் 3 அடி ஆழத்திற்கு கீழ் மணல் எடுக்க கூடாது என அரசாணை இருந்தும், பெண்ணாடம் மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி 9 அடிக்கும் மேல் மணல் அள்ளப்படுகிறது. தேசிய வேலை உறுதியளிப்பு திட்டத்தில் புதியதாக குளம் வெட்டியிருப்பதை போல, வெள்ளாற்றில் ஆங்காங்கே பாதாள குளங்கள் காட் சியளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும், விவசாய பணிகளுக்கு நீர் ஆதாரம் குறையும் அபாயமும் உருவாகியுள்ளது. அதிக ஆழத்திற்கு மணல் எடுக்கும் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டும், இதுவரை பெண்ணாடம் குவாரியில் நடவடிக்கை எடுத்தபாடில்லை. மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வெள்ளாற்று கரையோர விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் விருத்தாசலம்- ராமநத்தம் நெடுஞ்சாலையில் மணல் வண்டிகளை மறிக்கும் தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior