பண்ருட்டி :
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவில் ர்வாக அதிகாரி போலீசில் புகார் செய்துள்ளார்.
பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் சிஷ்டகுருநாதர் கோவில் குளம் அருகில் சிஷ்டகுருநாதர் கோவில், பிடாரிம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் 28 சென்ட் காலியிடம் உள்ளது. இந்த இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து ஊராட்சிக்கும், இந்துசமய அறநிலையத்துறைக்கும் பண்ருட்டி மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் பிரச்னைக்குரிய இடத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் 2 லட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம் கட்டும் பணி துவங்கியது. நேற்று முன்தினம் 6 லட்சம் செலவில் ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி துவங்கியது.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், கோவிலுக்கு சொந்தமான இடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அந்த இடத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுவது கோர்ட் விதிமுறைகளை மீறிய செயல். ஆகவே கட்டுமான பணியை தடுத்து நிறுத்தக் கோரி புதுப்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக