உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 03, 2010

மின் உற்பத்தியை பெருக்க புதிய திட்டங்கள் : அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

காட்டுமன்னார்கோவில் :

                 மின் உற்பத்தியை பெருக்க தி.மு.க., ஆட்சியில் மட்டுமே புதிய திட் டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.

                      காட்டுமன்னார் கோவில் அடுத்த முட்டத்தில் 33 கே.வி., புதிய துணை மின் நிலைய துவக்க விழா நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். சிதம்பரம் செயற் பொறியாளர் செல்வசேகர் வரவேற்றார்.  துணை 

மின் நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: 

                           கடந்த 1996ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில்தான் மின் உற்பத்திக்காக பல் வேறு நடவடிக்கை எடுக் கப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க., அரசு மின் உற்பத்தியை பெருக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த ஆட்சியில் தொழிற்சாலைகள் புதிதாக துவங்காததால் மின் தேவை அதிகரிக்கவில்லை. ஆனால் தி.மு. க., ஆட்சியில் தொழிற்சாலைகள் அதிகம் துவங்கியுள்ளதாலும், கிராமங்களில் இலவச "டிவி', வழங்கியுள்ளதால் குடிசைகளுக்கும் மின்சாரம் வழங்குவதால் தேவை அதிகரித்துள்ளது. அதற் கேற்ப மின் உற்பத்தியை பெருக்க பல புதிய திட் டங்கள் செயல்படுத்தி வருகிறது.

              கடந்த 96ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த இந்த துணை மின் நிலைய திட் டம் அடுத்து வந்த அ.தி. மு.க., ஆட்சியில் கைவிடப்பட்டு தற்போது திறக் கப்பட்டுள்ளது. இங்கு துணை மின் நிலையம் திறந்ததன் மூலம் 50 கிராமங்களை சேர்ந்த 6100 வீடுகள், வணிக நிறுவனங்கள், 85 குடிசை தொழில், 4000 குடிசை வீடுகள், 30 தொழிலகங்கள் பயனடையும். சிதம்பரம் மின் கோட் டத்தில் மின் தட்டுப் பாட்டை போக்கவும், ஸ்ரீமுஷ்ணம், வானமாதேவி, பின்னத்தூர், பி.முட்லூர், புவனகிரி துணை மின் நிலையங்களின் திறன் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என பேசினார்.விழாவில் டி.ஆர்.ஓ., நடராஜன், ஒன்றிய சேர் மன்கள் ஜெயச்சந்திரன், மாமல்லன், முத்துப்பெருமாள், பேரூராட்சி தலைவர் கணேசமூர்த்தி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் சின்னப்பா உள்ளிட்டடோர் பங்கேற்றனர். தலைமை பொறியாளர் சண்முகம் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior