உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: கடலூரில் 10ம் தேதி துவங்குகிறது


கடலூர்: 

                      ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் 10ம் தேதி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் வரும் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை  கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது.

                      வேலூர், காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சிப்பாய் (பொது, வர்த்தகம், டெக்னிக்கல், கிளார்க் கீப்பர் டெக்னிக்கல், நர்சிங் உதவியாளர்) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். சிப்பாய் டெக்னிக்கல் பிரிவிற்கு பிளஸ்2வில் ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் தேர்ச்சி பெற் றிருக்க வேண்டும். நர்சிங் உதவியா ளர் பிரிவிற்கு பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற் றும் உயிரியல் பாடப் பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

                             சிப்பாய் பொதுப் பிரிவிற்கு 10ம் வகுப்பு தேர்வில் 45 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் வர்த்தகப் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் பணிகளுக்கு பிளஸ் 2 வில் 50 சதவீத மதிப் பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் டெக்னிக்கல் மற்றும் நர்சிங் உதவியாளர் பணிகளுக்கு வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் நேர்முக தேர்வு நடக்கிறது. சிப்பாய் பொது பணிக்கான தேர்வு வரும் 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது. அதில் வேலூர், கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு 14 மற்றும் 15ம் தேதிகளிலும், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு 15 மற்றும் 16ம் தேதிகளில் நடக்கிறது.

                            சிப்பாய் வர்த்தக பணிக்கு 16 மற்றும் 17ம் தேதிகளிலும், சிப்பாய் கிளார்க் ஸ்டோர்கீப்பர்  பணிகளுக்கு 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கிறது. ராணுவ பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் அவரவர்களுக்கு குறிப்பிட்ட தேதிகளில் காலை 5.30 மணிக்கு விளையாட்டரங்கிற்கு வர வேண்டும். இத்தகவலை கலெக்டர் சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior