உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

சிதம்பரம் நகரில் குளங்களை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

சிதம்பரம்:
 
                   கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு நிவாரணமாக பட்ஜெட்டில் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியிலிருந்து சிதம்பரம் நகரின்  மையப்பகுதியில் உள்ள இளமையாக்கினார் குளம், ஞானப்பிரகாசர் குளம் ஆகியவற்றை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்.சந்திரசேகரன் கேட்டுக்கொண்டார்.
 
                 சிதம்பரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர் ராஜாமான்சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
பின்னர் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பேசியது வருமாறு:
 
அப்புசந்திரசேகரன்(திமுக): 
 
         பொறியியல் பிரிவில் போதிய ஆள்கள் நியமிக்க கோரி கடந்த கூட்டத்தில் டேபிள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுகுறித்து விளக்கம் தேவை.
 
 ஆணையாளர் மு.ஜான்சன்: 
 
            ஒரு வாரத்திற்குள் பட்டியல் பெறப்பட்டு போதிய ஆள்கள் நியமிக்கப்படுவார்கள்.
 
எல்.சீனுவாசன் (மதிமுக): 
 
            சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் கழிவறை போதிய உயரத்தில் தடுப்புசுவர் இல்லாததால் அருகில் ஆண்கள் கழிவறையிலிருந்து பார்த்தால் தெரிகிறது. இதனால் பெண்கள் கழிவறையை பயன்படுத்த தயங்குகின்றனர்.
 
தலைவர்: 
                ஒரு வாரத்துக்குள் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
ச.அமிர்தலிங்கம் (இ.காங்): 
 
             மாலைக்கட்டித்தெரு-சபாநாயகர்தெரு சந்திப்பில் உள்ள இலவச கழிவறை துர்நாற்றம் வீசுகிறது. அதனை சீரமைத்து அருகில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும். போல்நாராயணன்தெரு சாலை போடப்படாததால் செம்மண் பறந்து அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத நிலை உள்ளது. பெரும்பாலான கடைகள் திறக்கப்படாமல் விவசாயிகள் பெரும் அவதியுறுகின்றனர்.
 
மு.ராஜலட்சுமி (விடுதலைச்சிறுத்தைகள்): 
 
               எனது வார்டில் அனைத்து பகுதிகளுக்கும் சாலைவசதி, வடிகால் வசதி செய்து தர வேண்டும். காலியாக உளள துப்புரவுத் தொழிலாளர் பணியிடங்களில் வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். உழவர் சந்தை பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி எப்போது கட்டப்படும்?
 
தலைவர்: 
 
         மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விடப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும். 
 
முகமதுஜியாவுதீன் (இ.காங்): 
 
              கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் நகரில் உள்ள அடிபம்புகளை சீரமைக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior