உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

பண்ருட்டியில் ஏப்ரல் மாதம் மக்கள் குறைகேட்பு கூட்டம்: ஆட்சியர்

பண்ருட்டி:
 
                    ஏப்ரல் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து பண்ருட்டியில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் பெ.சீத்தாராமன் வியாழக்கிழமை  தெரிவித்தார். 
 
                பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம், உதவி வேளாண்மை அலுவலர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், செயல்படாமல் உள்ள உழவர் சந்தையை பார்வையிட்டார். 
 
பின்னர் மாவட்ட ஆட்சியர் பெ.சீத்தாராமன் கூறியது:
 
               நீண்ட நாள்களாக செயல்படாமல் உள்ள உழவர் சந்தையை இயக்குவது தொடர்பாக, கோட்டாட்சியர், காவல்துறை, போக்குவரத்து துறை, வியாபாரிகள், நுகர்வோர் ஆகியோர் கொண்ட கூட்டத்தை கூட்டி ஆலோசித்து பார்ப்போம். இதில் தீர்வு ஏற்படாவிட்டால் மாற்று இடம் தேர்வு செய்வது குறித்து முயற்சிக்கலாம். பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர்கள் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளதை வரும் வழியில் பார்த்தேன். பண்ருட்டியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைப்பது குறித்து சில நாள்களுக்கு முன் முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார்.÷தொடர்ந்து நகர நிர்வாகம் கெடிலம் நதியில் குப்பைகளை கொட்டி வருவது, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளாக எலும்பு முறிவு மருத்துவர் இல்லாமலிருப்பது உள்பட பல குறைபாடுகளை நிருபர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு ஆட்சியர், ஏப்ரல் மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் பண்ருட்டியில் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து மக்கள் குறை கேட்பு கூட்டம் நடத்தப்படும் என கூறினார். பண்ருட்டி வட்டாட்சியர் ஆர்.பாபு, தோட்டக்கலை  உதவி இயக்குநர் வி.ராமலிங்கம், வேளாண் உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ், துணை வேளாண் அலுவலர் என்.டி.ரவிசேகர், உதவி வேளாண் அலுவலர்கள் சரவணன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior