திட்டக்குடி:
திட்டக்குடியில் ஏ.டி.எம்., வசதியுடன் புதிய இடத்தில் லட்சுமி விலாஸ் வங்கி திறப்பு விழா நடந்தது. திட்டக்குடியில் லட்சுமி விலாஸ் வங்கி முதன் முறையாக துவங்கி, 41 ஆண்டுகள் சேவை புரிந்து வருகிறது. ஏ.டி.எம்., வசதி உட்பட அனைத்து நவீன வசதிகளுடன் புதிய கட்டடத்தில் திறப்பு விழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. தொழிலதிபர் ராஜன், பேரூராட்சி தலைவர் மன்னன் முன்னிலை வகித்தனர். கிளை மேலாளர் ஸ்ரீராம் வரவேற்றார்.
தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் பொறியியல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கி, புதிய வங்கியினை திறந்து வைத்தார். புதிய கட்டடத்தில் நிர்வாக இயக்குனர் பூங்கொடி ராஜபிரதாபன் குத்துவிளக்கேற்றினார். பாதுகாப்பு பெட்டக வசதியினை டி.எஸ்.பி., இளங்கோ, லாக்கர் வசதியினை தாசில்தார் கண்ணன் திறந்து வைத்தனர். ஏ.டி.எம்., வசதியினை ஆறுமுகம்- சொர்ணம் அறக்கட்டளை அறங்காவலர் ராஜபிரதாபன், ராம்கோ ஏஜென்ட் பாலகிருஷ்ணனும் துவக்கி வைத்தனர். விழாவில் தொழிலதிபர் தங்கராசு ஒரு லட்சம் டிபாசிட் செய்து, சேவையை துவக்கி வைத்தார். சென்னை துணை பொது மேலாளர் சேகர், வங்கியின் சேவை குறித்து பேசினார். இதில் வணிகர் சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு, சப்- இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன், அரிமா சண்முகம், அய்யப்பன், பாபு, விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக