உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

வேளாண் தகவல்களை தெரிந்து கொள்ள இணையதளம்


சிதம்பரம்:
 
              வேளாண்மை தொடர்பான அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் வேளாண் இணையதளம் ஒன்றை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த இணையதளம் மூலம் விவசாயிகள் சந்தை நிலவரம் பற்றிய தகவல்களையும் அவ்வப்போது  தெரிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.முருகேசபூபதி தெரிவித்தார்.
 
                   சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் உழவர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்புரையாற்றிய முருகேசபூபதி இதைத் தெரிவித்தார். விழாவில் வேளாண்புல முதல்வர் பூ.நாராயணசாமி தலைமை வகித்துப் பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலம் கண்டுபிடித்த ஏயூ1 நெல், ஏயூ1 கத்திரி ரகங்கள் குறித்தும், உயிர் உரங்களில் பூச்சிக்கொல்லி மருந்தாக உள்ள பழுப்பு நிலக்கரி சாம்பலின் பயன்பாடு குறித்தும் தெரிவித்தார். மேலும் தமிழ்நாடு வேளாண் வேளாண் பல்கலையுடன் இணைந்து செயலாற்ற அண்ணாமலை பல்கலைக்கழகம் தயாராக உள்ளது என்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராமநாதன் தொடக்கவுரையாற்றினார். அவர் பேசுகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் ஆராய்ச்சிகள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார். வேளாண் விரிவாக்கத்துறை தலைவர் பேராசிரியர் ஜெ.வசந்தகுமார் வரவேற்றார். கடலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் வாழ்த்துரையாற்றினார். விரிவுரையாளர் பி.சண்முகராஜா நன்றி கூறினார். விழாவை முன்னிட்டு பல்கலைக்கழக வேளாண்புல வளாகத்தில் உழவர்கள் பயன்பெறும் வகையில் வேளாண் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior