கடலூர்:
தீயணைப்பு வீரர்களுக்கு இரண்டு நாள் பணியிடை பயிற்சி கடலூரில் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் 14 தீயணைப்பு நிலையங்களில் 270 தீயணைப்பு வீரர்கள் பணி புரிகின்றனர். இவர்களுக்கு இரண்டு நாள் பணியிடை பயிற்சி கடலூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் நேற்று துவங்கியது. அதில் உடல் திறன், மூச்சுக்கருவி பயிற்சி, தீயணைப்பு கருவிகள் கையாளுதல், முடிச்சு அவிழ்த்தல், தீயில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளித்தல் மற்றும் மன வளக்கலை யோகா உள் ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
கடலூர் கோட்ட அலுவலர் சுப்ரமணியன் தலைமையில் உதவிக் கோட்ட அலுவலர் ரவிச்சந்திரன், நிலைய அலுவலர்கள் துரை, குமார், கிருஷ்ணமூர்த்தி, ஜாகீர்முகமது, பழனிவேல், சீனிவாசன், பயிற்சியாளர் வீரபாகு ஆகியோர் பயிற்சி அளித்தனர். நேற்று 135 வீரர்கள் பயிற்சி பெற்றனர். இன்று (26ம் தேதி) 135 வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக