கடலூர்:
மருந்து வாங்குபவர்கள் டாக்டரிடம் காண்பித்த பிறகே உட்கொள்ள வேண் டும் என கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக்கொண்டார்.
இது குறித்து மருந்து ஆய்வாளர் குருபாரதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
கடலூரில் போலி இருமல் மருந்து தயார் செய்து தமிழகம் முழுவதும் சப்ளை செய்யப்பட்டு வந்ததை அண்மையில் மருத்துவத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து மருந்துகளை கைப்பற்றினர். இந்த போலி மருந்து சென்னையில் உள்ள மருந்து கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. கடைகளில் வாங்கி சென்றவர்கள் மருந்தை உபயோகித்து பார்த்துவிட்டு திருப்பி கடைக்காரர்களிடம் கொடுத்துள்ளனர். அப்போது தான் சில்லரை வியாபாரிகள் மொத்த வியாபாரியான ஓவியம் எண்டர் பிரைசஸ்க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர்.
அப்போது சந்தேகம் அடைந்த மொத்த வியாபாரி மருத்துவத்துறை இயக்குனருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அந்த மருந்து ஆராயப் பட்டு விசாரணைக்கு பின் கடலூரில் உள்ள செல்வவினாயகர் ஏஜன்சியின் உரிமையாளர் வள்ளியப்பனை கைது செய்துள்ளனர்.
கடலூர் ஏஜன்சியில் 40 ஆயிரம் பாட்டில்கள் இருந் திருக்க கூடும் என நம்பப்படுகிறது. அவற்றில் 2,700 பாட்டில்கள் கைப்பற்றியது போக மீதியை நகராட்சி சுடுகாடுகளில் பிரேதத்துடன் சேர்த்து எரித்துள் ளது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறுகையில்,
'இந்த போலி பாட்டிலுக்கும், ஒரிஜினல் பாட்டிலுக்கும் நல்ல வித்தியாசம் உள்ளது. பாட்டிலின் கலர், லேபிள், சீல் ஆகியவை பார்த்தாலே தெரிந்துகொள்ளும் அளவில் உள்ளது. எனவே பொது மக்கள் கடைகளில் வாங்கும் மருந்துகளுக்கு கண்டிப்பாக பில் வாங்க வேண்டும். கடைக்காரர்கள் பார்மசிஸ்ட் இல்லாமல் விற்பனை செய்யக் கூடாது. டாக்டர்கள் சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது. மருந்து வாங்கிய பின்னர் டாக்டரிடம் காண்பித்து உட்கொள் ளுதல் வேண்டும். மருந்து சாப்பிட்ட உடன் ஏதேனும் பிரச்னை இருந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். போலி மருந்து சம்மந்தமாக புகார் தெரிவிக்க வேண்டி இருந்தால் கடலூர் மருந்து ஆய்வாளர் குருபாரதி மொபைல் 9444954807 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறினார். டி.ஆர்.ஓ., நடராஜன் உடனிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக