உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மார்ச் 26, 2010

இருதரப்பினரிடையே மோதல் சம்பவம்: கடலூரில் அமைதிக் கூட்டம்

கடலூர்: 

                    கடலூர் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல்  தொடர்பாக நேற்று சமாதானக் கூட்டம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

                 கடலூர் அடுத்த வழிசோதனைப்பாளையம் மற்றும் நாயக்கநத்தம் கிராமத்தில் கடந்த 21ம் தேதி இருதப்பினரிடையே  கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 7 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 8 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க நேற்று மாவட்டம் நிர்வாகம் சார்பில் அமைதிக் கூட்டத் திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் முன்னிலை வகித்தார்.  டி.ஆர்.ஓ., நடராஜன், ஆர்.டி.ஓ., செல்வராஜ், டி.எஸ்.பி., ஸ்டாலின் தாசில்தார் தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் கோபால் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

                     பாதிக்கப்பட்ட இருதரபினர் தரப்பில் முக்கிய பிரமுகர்கள் அமைதிக் கூட்டத்தில்  பங்கேற்றனர். கூட்டத்தில் இருதரப்பை சேர்ந்தவர்கள், வருவாய்த்துறை, போலீசார் கொண்ட முத்தரப்பு அமைதிக்குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.  இதில் இருதரப்பில் தலா ஐந்து பேர் கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் வருவாய்த்துறை, போலீஸ்  உள்ளிட்ட 16 பேர் கொண்ட சமாதான குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் மூன்று வாரத்தில் திங்கள் கிழமைகளின் கூடி அப்போதைய பிரச்னைகள் குறித்து பேசி சுமூக முடிவெடுக்க அறிவுறுத்தப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior