உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

தனியார் பஸ்களில் மறைமுக கட்டண உயர்வு கடும் நடவடிக்கை: ஆர்.டி.ஓ., எச்சரிக்கை


கடலூர்: 

              தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார போக்குவரத்து அதிகாரி எச்சரித்துள்ளார்.

               கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சேத்தியாத்தோப்பு, நெல்லிக்குப்பம், கடலூர், சிதம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு உத்தரவு ஏதுமின்றி தனியார் பஸ்களில் திடீரென மறைமுகமாக கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. டீசல் விலை உயர்வை காரணம் காட்டி சாதாரண மற்றும் மினி பஸ்களில் குறைந்த பட்சம் 2 ரூபாயை 3ஆகவும், 3.50ஐ 4 ரூபாயாகவும், 5.50ஐ 6 ரூபாயாகவும், 7.50ஐ 8 ரூபாயாக உயர்த்தி கட்டணம் வசூலிப்பதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில் 

                       "மாவட்டத்தில் 366 தனியார் பஸ்களும், 472 அரசு பஸ்கள் மற்றும் 121 மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. தனியார் பஸ்களில் கட்டணங்கள் உயர்த்தப் பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. இதுபற்றி தீவிரமாக விசாரித்து வருவதோடு திடீர் ஆய்வும் மேற் கொள்ள இருக்கின்றோம். சோதனையின் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.அதேப்போன்று சரக்கு ஏற்றும் மினி லாரிகளில் ஆட்களை ஏற்றிச் சென்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில் 4 மினி லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. மேலும் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் 12ம் தேதி வரை சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தியதற்காக 10 டிரைவர்கள் உரிமத்தை 6 மாதகாலம் தற்காலிக ரத்து செய்தும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 24 பேர் உரிமம் முழுமையாகவும் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது' என கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior