உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் அதிகாரி கைது


கடலூர்: 

                 சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய விற்பனையாளரிடம் மூவாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் நிறுவன உதவி மேலாளரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

                  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(35). நெய்வேலி டாஸ்மாக் கடை விற்பனையாளரான இவர், முறைகேடு செய்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இதனை ரத்து செய்து மீண்டும் பணியாணை வழங்க டாஸ்மாக் நிறுவன மாவட்ட உதவி மேலாளர் பட்டுசாமி (57) 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். ராஜமாணிக்கம் 2,000 ரூபாய் கொடுத்தார். மேலும், 3,000 ரூபாய் கொடுத்தால் தான் பணியாணை வழங்கப்படும் என பட்டுசாமி கூறினார். இதுகுறித்து ராஜமாணிக்கம், கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். அவர்களின் ஆலோசனையின் பேரில், ராஜமாணிக்கம் நேற்று மதியம் 3,000 ரூபாயுடன், கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள டாஸ் மாக் அலுவலகத்திற்கு சென்று, உதவி மேலாளர் பட்டுசாமியிடம் கொடுத்தார். அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.எஸ்.பி., வேதரத்தினம், இன்ஸ்பெக்டர்கள் திருமால், பழனி உள்ளிட்டோர் லஞ்சம் வாங்கிய உதவி மேலாளர் பட்டுசாமியை கையும், களவுமாக பிடித்தனர். அவரிடம் 4,000 ரூபாய் இருந்தது. இது குறித்து விசாரணை செய்ததில், ஏற்கனவே, மீய்ச்சுவல் பணி மாற்றத்திற்காக இருவரிடம் தலா 500 ரூபாய் லஞ்சம் வாங்கியது தெரிய வந்தது. லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து, பட்டுசாமியை கைது செய்து கடலூர் மாவட்ட குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior