உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

சிதம்பரத்தில் இன்று நாட்டியாஞ்சலி துவக்கம் : பிரபல கலைஞர்கள் குவிந்தனர்

சிதம்பரம்:

                  சிதம்பரம் நடராஜர் கோவிலில் 29வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா இன்று (13ம் தேதி) துவங்குகிறது. பிரபல நாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியன் பரதம் ஆடுகிறார். நாட்டியாஞ் சலியில் பங்கேற்க பல்வேறு நாடுகளில் இருந்து கலைஞர்கள் சிதம்பரம் வந்துள்ளனர். நடராஜ பெருமான் நாட்டி யமாடிய சிதம்பரத்தில், 1981ம் ஆண்டு அறக்கட்டளை துவங்கி, கடந்த 28 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி விழா நடத்தப்பட்டு வருகிறது.

                       இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் நாட்டிய கலைஞர்கள் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். மகா சிவராத்திரியான இன்று (13ம் தேதி) 29வது நாட்டியாஞ்சலி விழா துவங்கி, 17ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் ராமநாதன், என்.எல்.சி., சேர்மன் அன்சாரி ஆகியோர் விழாவை துவக்கி வைக்கின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியான இன்று சிவராத்திரி என்பதால், மாலை 5.30 மணிக்கு துவங்கி, மறுநாள் 14ம் தேதி காலை 5 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. நாட்டியாஞ்சலி இன்று துவங்குவதையொட்டி, கோவில் வெளிப்பிரகாரத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior