உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

மின்கம்பங்கள் 'டமால், டமால்' சிதம்பரத்தில் மக்கள் ஓட்டம்

சிதம்பரம்: 
 
                 சிதம்பரத்தில் பொதுமக்கள் நடமாட் டம் உள்ள பகுதியில் இரண்டு மின் கம்பங்கள் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சிதம்பரம் வடக்கு வீதி தில்லையம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே இரண்டு மின் கம்பங்கள் கீழ் பகுதியில் செரித்த நிலையில் இருந்தது. நேற்று மதியம் 2 மணியளவில் இரண்டு மின்கம்பங்களும் திடீரென கீழே விழுந்தன. அப்போது மின்சாரம் இருந்ததால் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டது.

               இதனைக் கண்டு பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்த மின் துறையினர் மின்சாரத்தை துண்டித்து, மின்கம்பத்தை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னரே சாலையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். மின் கம்பம் விழுந்த வழியாக தில்லைக் காளி கோவிலுக்கு செல்ல வேண்டும். பிரபல தனியார் பள்ளி உள்ளது. முக்கிய நகர் பகுதிக்கு அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும் என்பதால் சாலை எப்போதும் பிசியாக இருக்கும். மின்கம்பம் விழுந்த நேரத்தில் யாரும் செல்லாததால் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இதே போன்று இரண்டு ஆண்டுக்கு முன்பு தெற்கு வீதியில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் நடந்தது. சிதம்பரம் நகரில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை கணக்கெடுத்து உடனடியாக மாற்ற மின் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior