உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 13, 2010

மாற்று திறன் படைத்தோருக்கு உதவி தொகைகலெக்டர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

விருத்தாசலம்: 

             விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் மாற்று திறன் படைத்தோருக்கு உதவி தொகை வழங்குவது குறித்து அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

               மாவட்ட வருவாய் அதிகாரி நடராஜன் முன்னிலை வகித்தார். தாசில் தார் ஜெயராமன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் நித்தியானந் தம், பி.டி.ஓ., க்கள், ஆர்.ஐ.,கள் வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகள், அரசு டாக்டர்கள் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு தலைமை தாங்கி கலெக்டர் சீத்தாராமன் பேசுகையில், 

மாற்று திறன் படைத்தோர் 18 வயதில் இருந்து 64 வயதிற்குள்ளும், ஊனம் 80 சதவீதம் இருக்க வேண் டும். வயதிற்கான ஆதாரம், ஊனத் திற்காக மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வு அலுவலரிடமிருந்து பெறப் பட்ட அடையாள அட்டை, வறுமைக்கோடு பட்டியல் நகல் இருக்க வேண்டும்.

          இவ்வாறு தகுதி வாய்ந்த மாற்று திறன் படைத்தோர் உதவி தொகை வேண்டி மனுக்களை எழுதி தங்கள் பகுதிக்குட்பட்ட ஊராட்சி தலைவர்கள், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., பி.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், சமூக பாதுகாப்பு அலுவலகம் ஆகிய இடங்களில் கொடுக்கலாம்.  மனுக்களை பரிசீலித்து உதவி தொகை வழங்கப்படும் என பேசினார்.
பின்னர் அவர்  கூறியதாவது:
                    மாற்று திறன் படைத்தோருக்கு உதவி தொகை வழங்கும் வாரம் வரும் 15 ம் தேதி முதல் 20 ம் தேதி வரை நடக்கிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் விருத்தாசலம், காட்டுமன்னார்குடி, நல்லூர், மங்களூர் ஒன்றியங்களில் செயல்படுகிறது.

             இதில் 8,207 பேர் மாற்று திறன் படைத்தோர் என பட்டியலிடப்பட் டுள்ளது. கம்மாபுரம் ஒன்றியத்தை சேர்த்தால் 10 ஆயிரம் பேர் பட்டியலில் இடம் பெறுவர். இவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior