கிள்ளை:
சிதம்பரம் அருகே கிள்ளை ரயில் நிலையத்தில் தண்டவாளம் சீரமைப்பு பணி நடந்தது.
விழுப்புரம்- மயிலாடுதுறை அகல ரயில்பாதை பணி முடிவடைந்துள்ள நிலையில் பயணிகள் ரயில் இயக்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. பாதுகாப்பு ஆணையர் கே.ஜே.எஸ். நாயுடு கடந்த 27ம் தேதி தண்டவாளங்கள், ரயில் நிலைய கட்டடங்கள், கிராசிங் பாயிண்ட்கள், பாலங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்தார்.ரயில்வே சாலையில் குறைந்த அளவில் ஜல்லிகள் கொட்டப்பட்டும், சில இடங்களில் ஜல்லிகளை பரப்பாமல் ஆங்காங்கே திட்டுத்திட்டாக கொட்டப் பட்டிருந்தது. கூடுதல் ஜல்லிகளை தண்டவாளங்களின் சிலிப்பர் கட்டைகளுக்கிடையில் கொட்டி நிரப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நேற்று கிள்ளை ரயில் நிலையம் பகுதியில் தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகளுக்கு இடையில் ஜல்லிகளை கொட்டி தண்டவாளம் சீரமைப்பு பணி நடந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக