பரங்கிப்பேட்டை :
பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதித்த 50 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருப்புகள் கட்டித் தராததால் தமிழக அரசின் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தில் வீடுகள் கட்டித்தர கலெக்டருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரங்கிப்பேட்டை அங் காளம்மன் கோவில் தெரு பகுதி கடந்த சுனாமியின்போது பாதிக்கப்பட் டது. வெள்ளாற்றில் இருந்து 200 மீட்டர் தூரத் திற்குட்பட்ட பகுதிகளில் அரசு மூலமும், 200 மீட்டருக்கு அதிமாக உள்ள பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் மூலமும் குடியிருப்புகள் கட்டிக் கொடுக் கப்பட்டது.
ஆனால் வெள்ளாற்று பகுதியில் சுமார் 350 மீட்டர் தூரம் உள்ள அங்களாம்மன் கோவில் தெரு பகுதி சுனாமியில் பாதித்த போதிலும், இப்பகுதி மக்களுக்கு அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் குடியிருப்புகள் கட்டித்தரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் குடியிருப்புகள் கட்டிதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் செழியன் முதல்வருக்கு மனு அனுப்பியதை தொடர்ந்து, இதுகுறித்து விசாரணை நடத்தி சிதம்பரம் ஆர்.டி.ஓ., விற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் கலைஞர் வீட்டுவசதி திட்டத்தில் இந்தபகுதி மக்களுக்கு குடியிருப்புகள் கட்டித்தர கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.