உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

புவனகிரியில் இடிந்து விழும் நிலையில் நீர்த்தேக்க தொட்டி: புதியதாக கட்டப்படுமா?


புவனகிரி : 

                  புவனகிரியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்துவிட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர் பார்க்கின்றனர்.

                    புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் 25 ஆண் டிற்கு முன் 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்டது. இதன் மூலம் நகரப் பகுதிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காலப்போக்கில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்த காரைகள் பெயர்ந்தும், தொட்டியினுள் இறங்கி சுத்தம் செய்வதற்கு மேலே ஏற முடியாத அளவிற்கு படிக் கட்டுகள் உடைந்துள்ளன. இந்நிலையில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கு மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அனுப்பப் பட்டது. அதனை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் புவனகிரிக்கு வந்து பரிசோதனை செய்துவிட்டு சென்று பல மாதங்களாகியும் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் முன்பே புதிய நீர்த் தேக்க தொட்டி கட்ட வேண்டும் என பொதுமக் கள் எதிர்பார்க்கின்றனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior