சிதம்பரம் :
இருதய நோய் குறித்து டாக்டர்கள் கருத்தரங்கு சிதம்பரத்தில் நடந்தது. இந்திய மருத்துவ கழக சிதம்பரம் கிளை, போர்டிஸ் மலர் மருத்துவமனை இணைந்து சிதம்பரத்தில் டாக்டர்களுக்கான இதய நோய் (மாரடைப்பு) குறித்த கருத்தரங்கை நடத்தியது. மருத்துவ கழக கிளை தலைவர் வெற்றி வீரமணி தலைமை தாங்கினார். செயலாளர் அசோக்குமார் வரவேற்றார். பிரபல டாக்டர்கள் முருகேசன், மிஸ்ரா, சாந்தி, ரமேஷ் உள்ளிட்ட 60 டாக்டர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.சென்னை மலர் மருத்துவமனை இருதய சிகிச்சை நிபுணர் மதன்மோகன், இருதய நோய் குறித்து விரிவாக பேசினார். அப்போது, இருதய அடைப்பு நோயை மருந்து மூலம் குணப்படுத்துவதைவிட நவீன தொழில்நுட்பமான பிரைமரி ஆஞ்சியோ பிளாரிடா சிகிச்சை மூலம் நூறு சதவீதம் சரி செய்ய முடியும் என் பதை விளக்கினார். உடல் நல சேவை பிரிவு கிரிபானந்த் நன்றி கூறினார்.