உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

கான்கிரீட் வீட்டு வசதி திட்டம் கணக்கெடுக்கும் பணி துவங்கியது

கடலூர் : 

                      மாவட்டத்தில் 13 ஒன்றியங்களிலும் கான்கிரீட் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் கட்டுவதற்காக குடிசை வீடுகள் கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. கணக்கெடுப்பின் போது ரேஷன் கார்டு, மின் இணைப்பு, வீட்டு வரி விதிப்பு எண் மற்றும் நில உரிமைக் கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் (பட்டா, உரிமை பத்திரம்) கணக்கெடுப்பு குழுவினரிடம காண் பிக்க தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இத்தகவல் கிராமங்களில் சரியாக சென்றடையவில்லை. இதனால் பெரும்பாலான பகுதிகளில் கணக் கெடுக்க சென்றவர்களிடம் ஆவணங்களை காண்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

                   கண்ணாரப்பேட்டை பகுதியில் துவங்கிய கணக்கெடுப்பு பணியை பார்வையிட கலெக்டர் சீத்தாராமன் நேரில் சென்றார். அப்போது வீட்டின் உரிமையாளர் கணக்கெடுப்பு பணிக்கு வருவது தெரியாது. அதனால் மின் இணைப்பு, வீட்டு வரி விதிப்பு எண் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் தற்சமயம் தன்னிடம் இல்லை என தெரிவித்தனர். இதுகுறித்து கலெக்டர் சீத்தாராமன் தெரிவிக்கையில்'கான்கிரீட் வீடு கணக்கெடுக்கும் பணிக்காக முதல் கட்டமாக 399 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு நேற்று மதியம் 12 மணி அளவில் 266 கிராமங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. காரைக்காடு பகுதி கண்ணாரப்பேட்டையில் நான் நேரில் சென்று ஆய்வு செய்த போது பத்திரிகை செய்திகள் அவர்களை சென்றடையவில்லை என தெரியவந்தது. இதனையடுத்து அனைத்து கிராமங்களிலும் தண்டோரா மூலம் தெரிவிப்பது. நாளை 31ம் தேதி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் அந்தந்த ஒன்றிய அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி அவர்கள் மூலம் விழிப்புணர்வு அடையச் செய்வது. அதுமட்டுமின்றி கிராமத்திற்கு கணக்கெடுக்கும் குழு செல்வதற்கு முதல் நாள் அந்த பகுதியில் டிஜிட்டல் பேனர் வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது' என கூறினார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior