உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

திட்டக்குடி பகுதியில் மான்களை காத்திட நடவடிக்கை தேவை! காடுகளில் தண்ணீர் வசதி ஏற்படுத்த வேண்டும்


திட்டக்குடி : 

                 திட்டக்குடி பகுதிகளில் மான்கள் இறப்பதை தடுத்திட காட்டை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

               கடலூர் மாவட்டம் ராமநத்தம், சிறுபாக்கம், வேப்பூர் பகுதிகளில் நாங்கூர், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் அரசுக்கு சொந்தமான காடுகள் உள்ளன. இங்கு மான்கள், முயல்கள், காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றி, மயில், குரங்குகள் என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. காடுகளில் உள்ள குட்டைகளில் உள்ள தண்ணீரை விலங்குகள் குடித்து வந்தன. கோடை காலங்களில் குட் டைகளில் தண்ணீர் வற்றிவிட்டால், விலங்குகள் தண்ணீரை தேடி அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தேடி வரத்துவங்கின.

                  இதனை தடுத்திடவும், காடுகளில் உள்ள விலங்குகளை பாதுகாத்திடும் பொருட்டு கடந்த அ.தி. மு.க., ஆட்சியில் அரசுக்கு சொந்தமான காடுகளில் உள்ள விலங்குகளின் தண் ணீர் தேவைக்காக ஆங் காங்கே சிமென்ட் தொட்டிகள் கட்டப்பட்டன. அதில் கோடை காலங்களில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்பி வந்தனர். ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் காடுகளில் உள்ள சிமென்ட் தொட்டிகளை வனத்துறையினர் பராமறிக்க மறந்தனர். இதனால் தொட்டிகள் பழுதாகி தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதனால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி காட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இவ்வாறு சிறுபாக்கம் பகுதி காட்டில் உள்ள வன விலங்குகள் உணவு மற் றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்கு வரும் போது காட்டையொட்டி செல்லும் சேலம்- விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையை கடக்க முயலும் போது அவ்வழியே வரும் வாகனங்களில் சிக்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்தன.

                    இதனையடுத்து வன விலங்குகள் கடக்கும் சாலையென வாகன ஓட்டிகள் கவனித்து செல்ல ஏதுவாக எச்சரிக்கை போர்டுகள் நெடுஞ்சாலையோரம் ஆங்காங்கே வைக்கப்பட் டது. இருப்பினும் வன விலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிலையினை தடுக்க முடியவில்லை. அதேபோன்று சமீப காலமாக நாங்கூர் காட்டிலிருந்து மான்கள் உணவு மற்றும் தண்ணீருக்காக இரவு நேரங்களில் இடைச்செருவாய், கீழ்ச்செருவாய் வெலிங்டன் ஏரிகளுக்கு கூட்டமாக வந்து செல்கின் றன. மனித நடமாட்டம் இல்லாத நேரங்களில் வந்து செல்வதால், மனிதர்களின் தொந்தரவு ஏற்படுவதில்லை. ஆனால் நாய்களின் பிடியில் சிக்கி இறக் கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன் நாய்களிடம் சிக்கிய ஒரு வயது புள்ளி மானை இளைஞர்கள் காப்பாற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

                     வனப்பாதுகாப்பு சட் டம் கடுமையாக உள்ளதால் மான் உள்ளிட்ட விலங்குகள் வேட்டையாடுவது பெருமளவு குறைந்துள்ளது. இருப்பினும் காடுகளில் உள்ள விலங்குகளுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வனத் துறை முன்வராததால் இந்நிலை தொடர்கிறது. நாய்களிடமும், வாகனங்களில் சிக்கி வன விலங்குகள் இறப்பதை தடுக்க காடுகளை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டும். அதற்கு முன்பாக காடுகளில் உள்ள விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ''அழகுக்கு சொந்தமான மான் இனம்'' திட்டக்குடி பகுதி காடுகளில் இருந்ததாக கூற முடியுமே தவிர, காண முடியாது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior