உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

வேலுடையான்பட்டில் பங்குனி உத்திரம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்


நெய்வேலி : 

                நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர் கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வேலுடையான்பட்டு சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், இரவில் உற்சவம் சிறப்பு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித் தார். நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது.பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நேற்று காலை மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நெய்வேலி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் சுமந்தும், நீண்ட அலகுகள் குத்தியும், தேர் இழுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.

                     கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தினமலர் மற்றும் பிராமணர் சங்கம் சார் பில் நீர்மோர், அன்னதானம் வழங்கப் பட்டது. வழிநெடுகிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், பானகம் வழங்கினர். என்.எல்.சி., சேர்மன் அன்சாரி தனது வீட்டிலேயே பக்தர்களுக்கு அன்னதானம் வழங் கினார்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior