உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 30, 2010

ஸ்ரீமுஷ்ணத்தில் புதிய பேரூராட்சி அலுவலகம்: வேறு இடத்தில் கட்ட எம்.எல்.ஏ., மனு

ஸ்ரீமுஷ்ணம் : 
 
                ஸ்ரீமுஷ்ணம் பழைய பேரூராட்சி மன்ற கட்டடத்தை மறைத்து புதிய கட்டடம் கட்ட கூடாது என எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் மனு கொடுத்துள்ளார். ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி வளாகத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய பேரூராட்சி மன்ற கட்டடம் மற்றும் 72 லட்சம் ரூபாய் செலவில் புதிய மேல்நிலை தேக்க தொட்டி கட்டும் பணியை கடந்த 6ம் தேதி காட்டுமன்னார்கோவில் வந்த துணை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கடந்த 88ம் ஆண்டு கட்டப்பட்டு எம்.ஜி.ராமச் சந்திரன் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ள பழைய பேரூராட்சி மன்ற கட்டடத்திற்கு முன்பாக புதிய மன்ற அலுவலகம் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய மன்ற அலுவலகத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் தலைமையில் அ.தி.மு.க.,வினர் 20 பேர் நேற்று பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, நகர செயலாளர் கேசவன், பொருளாளர் தியாகராஜன் உள்ளிட் டோர் உடனிருந்தார். இதனிடையே அ.தி.மு.க.,வினர் கட்டடப்பணிகளை தடுத்து நிறுத்தி சாலை மறியல் செய்யப் போவதாக தகவல் பரவியதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து பேரூராட்சி வளாகத்தில் டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணி மேற் கொண்டனர்

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior