உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

வருவாய் ரூ.63,092 கோடி; செலவு ரூ. 66,488 கோடி: புது வரி இல்லா பட்ஜெட்


புதிய சட்டப் பேரவையில் 2010-2011 ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் க.அன்பழகன். உடன், முதல்வர் கருணாநிதி, துணை முதல
 
           புதிய சட்டப் பேரவையில் ரூ. 66 ஆயிரம் கோடிக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அன்பழகன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை உள்ளடக்கிய, புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார். 2010-11-ம் நிதியாண்டில் வரிகள் உள்ளிட்ட இனங்களின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் மொத்த வருவாய் ரூ.63,092 கோடியாக இருக்கும். மொத்தச் செலவு ரூ.66,488 கோடியாகும். 2006-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து நிதி அமைச்சர் பொறுப்பை வகித்து வரும் அன்பழகன், இம்முறையும் வரிச்சுமை இல்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். மொத்த வருவாயில் 49 சதவீதம் அரசுப் பணியாளர்களுக்கான சம்பளத்துக்குச் செல்கிறது. நிதானமான, அதே சமயம் அழுத்தம் திருத்தமான உரையுடன் மிகவும் தெள்ளத்தெளிவாக பட்ஜெட் உரையைத் தொடங்கிய அன்பழகன், புதிய சட்டப்பேரவை  கட்ட முழுமுதல் காரணமாக அமைந்த முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.  வரிச் சலுகைகள்: மிளகு, சீரகம், சோம்பு உள்ளிட்ட பொருள்களின் பொடி வகைகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு ஓராண்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.வணிகச் சின்னம் இடப்பட்ட காபித் தூள் (உடனடி காபித்தூள் தவிர), பெயிண்ட் பிரஷ், வணிகச் சின்னம் இடப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், கத்தி, கத்திரிக்கோல், கையில் பயன்படுத்தும் ஊசிகள், கொக்கிகள்-பட்டன்கள் போன்ற தையல் பொருள்கள், வணிகச் சின்னம் இடப்பட்ட உடனடி உணவுப் பொருள்கள் (மாவு, பொடி மற்றும் ஈர மாவு உள்பட) ஆகிய பொருள்கள் மீது இப்போதுள்ள 12.5 சதவீத வரி, 4 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த வரிக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் 
 
.மீனவர்களுக்கு: 
 
         மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய ஐஸ் கட்டிகளுக்கு வரிவிலக்கு  அளிக்கப்பட்டுள்ளது. ஜரிகை (பாலியஸ்டர் ஃபிலிம் நூல் மற்றும் ரேடியன்ட் நூல்  நீங்கலாக) மீதான கொள்முதல் மற்றும் விற்பனை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.ரூ.176 கோடியில்: மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ. 176 கோடியாகும். இத்துறை முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கும். பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.10,148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.கரும்பு கொள்முதல் விலை உயர்வு, பதநீர் கொள்முதல் உயர்வு, பெண்கள் திருமண நிதி உதவி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. இலவச கலர் டி.வி. திட்டத்தைத் தொடர்ந்து குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டு நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயத்தை ஊக்குவிக்க வரும் நிதி ஆண்டில் ரூ. 2,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். பயிர்க்கடன் மீதான வட்டியை ரத்து செய்வதற்கு ரூ. 140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
இரண்டேகால் மணி நேர உரை: 
 
             அமைச்சர் அன்பழகன் காலை 9.31 மணிக்குத் தொடங்கிய உரையை பிற்பகல் 11.46 மணிக்கு நிறைவு செய்தார். ஏறக்குறைய இரண்டேகால் மணி நேரம் பட்ஜெட் உரை நீடித்தது.வரவு } செலவு திட்டம் 2010-2011
 
தமிழக அரசின் சொந்த வருவாய்    (ரூ. கோடியில்)
 
 வணிக வரிகள்                                              26,846
 
ஆயத்தீர்வைகள்                                            7,508 
 
முத்திரைத் தாள்களும் பத்திரப் பதிவுக் கட்டணங்களும்              4,096
 
வண்டிகள் மீதான வரிகள்                           2,397 
 
ஏனைய வரிகள்                                                   592
 
வரி அல்லாத வருவாய்                                4,101
 
மாநிலத்தின் மொத்த வருவாய்               45,540 
  
மொத்த வருவாய் வரவுகள்
 
 மாநிலத்தின் சொந்த வருவாய் வரவுகள்      45,540
 
மத்திய அரசிடமிருந்து பெறப்படுபவை         17,552
 
மொத்த வருவாய் வரவுகள்                                63,092
 
மொத்த வருவாய் வரவுகள்                         63,092
 
மொத்த வருவாய் செலவுகள்                     66,488
 
வருவாய் பற்றாக்குறை                                  3,396
 
மூலதனச் செலவு                                             12,285
 
மூலதனச் செலவு (கடன் மற்றும்முன்பணங்களின் நிகரம் உள்பட)               12,826
 
மொத்த நிதிப் பற்றாக்குறை                          16,222
 
மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு   4,36,646
 
நிதிப் பற்றாக்குறை மொத்த உற்பத்தி மதிப்பின் சதவீதம்                             3.72%
            

வரிச் சலுகைகள்:
 
                    மிளகு, சீரகம், சோம்பு உள்ளிட்ட பொருள்களின் பொடி வகைகளுக்கும் வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சர்க்கரைக்கு ஓராண்டுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.வணிகச் சின்னம் இடப்பட்ட காபித் தூள் (உடனடி காபித்தூள் தவிர), பெயிண்ட் பிரஷ், வணிகச் சின்னம் இடப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகள், கத்தி, கத்திரிக்கோல், கையில் பயன்படுத்தும் ஊசிகள், கொக்கிகள்-பட்டன்கள் போன்ற தையல் பொருள்கள், வணிகச் சின்னம் இடப்பட்ட உடனடி உணவுப் பொருள்கள் (மாவு, பொடி மற்றும் ஈர மாவு உள்பட) ஆகிய பொருள்கள் மீது இப்போதுள்ள 12.5 சதவீத வரி, 4 சதவீதமாகக் குறைக்கப்படும். இந்த வரிக் குறைப்பு வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். 
 
கான்கிரீட் வீடுகள் 
 
             இலவச கலர் டி.வி. திட்டத்தைத் தொடர்ந்து குடிசைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டு நடப்பு நிதி ஆண்டில் 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ரூ. 1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
மாற்றுத் திறனாளிகளுக்கு:
 
               மாற்றுத் திறனாளிகளுக்கு தனித் துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒதுக்கீடு ரூ. 176 கோடியாகும். இத்துறை முதல்வரின் நேரடிப் பார்வையில் இயங்கும். பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.10,148 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
விவசாயம் 
 
          கரும்பு கொள்முதல் விலை உயர்வு, பதநீர் கொள்முதல் விலை உயர்வு, பெண்கள் திருமண நிதி உதவி உயர்வு உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. விவசாயத்தை ஊக்குவிக்க வரும் நிதி ஆண்டில் ரூ. 2,500 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். பயிர்க்கடன் மீதான வட்டியை ரத்து செய்வதற்கு ரூ. 140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 
 
மீனவர்களுக்கு 
 
        மீனவர்கள் பயன்படுத்தக் கூடிய ஐஸ் கட்டிகளுக்கு வரிவிலக்கு  அளிக்கப்பட்டுள்ளது.
 
இரண்டேகால் மணி நேர உரை 
 
            அமைச்சர் அன்பழகன் காலை 9.31 மணிக்குத் தொடங்கிய உரையை பிற்பகல் 11.46 மணிக்கு நிறைவு செய்தார். ஏறக்குறைய இரண்டேகால் மணி நேரம் பட்ஜெட் உரை நீடித்தது.
  • விலைவாசி மேலும் அதிகரிக்கும் - ஜெயலலிதா
  • பட்ஜெட்டில் மகத்தான நலத்திட்டங்கள் - தங்கபாலு
  • முள்ளை மறைத்து கொண்டிருக்கும் மலர் - தா. பாண்டியன்
  • வரி நீக்கம் வெறும் மாயஜாலம் - விஜயகாந்த்

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior