பண்ருட்டி:
கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான ஐஸ் கிரீம் மற்றும் பால் பொருள்களை நகர சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர். பண்ருட்டி நகரில் காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி இல்லாத பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து நகர சுகாதார அலுவலர் கோ.இராஜேந்திரன் தலைமையில், ஆய்வாளர்கள் எஸ்.மணிகண்டன், ஆர்.சுதாகர், துப்புரவுப் பணி மேற்பார்வையாளர்கள் கொளஞ்சியப்பன், பாண்டியன் உள்ளிட்டோர் கடலூர் சாலையில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை திடீர் என சோதனை மேற்கொண்டனர். இதில் ஐஸ் கிரீம் கடை ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான ஐஸ் கிரீம் மற்றும் பால் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3000 ஆகும்.இதனைத் தொடர்ந்து ஸ்வீட் கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக