கடலூர் :
தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் மேசாடி செய்த வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார். மகனை போலீசார் தேடி வருகின்றனர். சிதம்பரத்தை அடுத்த என்.பூலாமேடு கிராமத் தைச் சேர்ந்தவர் மனோகரன்(55). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அவரது மகன் ராஜசேகர்(30). சிதம்பரத்தில் உள்ள ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ் நிறுவனத்தில் வணிக கடன் பிரிவில் உதவியாளராக பணிபுரிந்தார்.இவர் தான் வேலை செய்த நிறுவனத்தில் கடந்த 2008ம் ஆண்டு தனது தந்தை பெயரில் ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்றார். அதில் ஏழு தவணை யாக 28,490 ரூபாய் செலுத் தினார். பின்னர் தவணை செலுத்தவில்லை.
இது குறித்து ஸ்ரீராம் பைனான்ஸ் அதிகாரிகள் விசாரணை செய்ததில், ராஜசேகர் கொடுத்த ஜாமீன் ஆவணங்கள் ஏற்கனவே வேறு இருவருக்கு வழங்கிய கடன் தொகைக்காக கொடுத்தது என தெரிய வந்தது. இந்நிலையில ராஜசேகர் தலைமறைவானார். இது குறித்து கிளை மேலாளர் கார்த்திக், எஸ்.பி., அஷ்வின் கோட்னீஷிடம் புகார் செய்தார். அதன்பேரில் மாவட்ட குற்றபிரிவு சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து மனோகரனை கைது செய் தனர். ராஜசேகரை தேடி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக