கடலூர் :
தேவனாம்பட்டினம் கடலில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரியைச் சேர்ந்த தாய் மற்றும் மகளை பொதுமக்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். கடலூர் தேவனாம் பட்டினம் சில்வர் பீச்சில் நேற்று மாலை பெண் ஒருவர் தனது 10 வயது சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் அந்த சிறுமியை தண்ணீரில் அமுக்கி மூழ்கடித்துக் கொண்டிருந்தார். இதனைக் கண்டு திடுக்கிட்ட கடற்கரையில் அமர்ந்திருந்த கடலூரைச் சேர்ந்த ரவி ஓடிச் சென்று சிறுமியை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தார். அதற் குள் அந்த பெண் கடலில் மூழ்கினார். மற்றவர்களின் உதவியுடன் அந்த பெண் ணையும் காப் பாற்றி இருவரையும் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விசாரணையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கம்பன் நகரைச் சேர்ந்த தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் பணிபுரியும் சீனுவாசன் மனைவி பத்மா (34). அவரது மகள் நிவேதா (10) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிப்பதாகவும், கடந்த சில ஆண் டாக பத்மாவின் கழுத்தில் கேன்சர் நோய் ஏற்பட்டுள் ளது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.
நோய் முற்றிய நிலையில் இறந்து விடுவோமோ என்ற அச்சத் திலும், அப்படி இறந்தால் தனது மகளை யார் காப் பாற்றுவது என்ற கேள்வியும் எழுந்தது. அதனால் தனது மகளையும் அழைத் துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சுக்கு வந்ததாகவும், வரும்போதே வழியில் தனது கைப்பையை தூக்கியெறிந்து விட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார். பத்மா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது கணவர் சீனுவாசனிடம் தெரிவிக்க புதுச்சேரி போலீசார் சென்றபோது கடந்த 2 நாட்களாக அவரும் வீட்டில் இல்லை என தெரியவந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக