உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

போக்கியம் கொடுத்த நிலத்தை மீட்க மோசடி: இருவருக்கு வலை


கடலூர் : 

                     இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரிக்க ரேஷன் கார்டில் பெயரை சேர்த்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் காண்பித்து மோசடி செய்த 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் சோனஞ்சாவடியைச் சேர்ந்தவர் கே.அசோக்குமார் (55). இவர் அதே பகுதியில் வசித்த விஜயரங்கன் என்பவரிடமிருந்த 2 ஏக்கர் நிலத்தை கடந்த 20 ஆண்டிற்கு முன் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து போக்கியம் எடுத்துள்ளார். தற்போது அந்த நிலத்தை தனியார் நிறுவனம் விலைக்கு கேட்டுள்ளனர். தற்போது விஜயரங்கன் உயிருடன் இல்லாததால் அவரது மகன் சதீஷ்குமார் அந்த நிலத்தின் மீதான போக்கியத்தை செட்டில் செய்யும்படி அசோக்குமாரிடம் கூறினார்.

                     இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு கே.அசோக்குமார் செட்டில் செய்ய மறுத்துள்ளார். நிலத்தை தனியார் கம்பெனிக்கு விற்க வேண்டும் என்பதால் சதீஷ்குமார், தனது உறவினரான பழனிவேல் மகன் அசோக்குமார் பெயரை ரேஷன் கார்டில் போலியாக சேர்த்து கிருஷ்ணமூர்த்தி மகன் கே.அசோக்குமார் என பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று நிலத் தின் மீதான போக்கியத்தை செட்டில் செய்து கொண்டு தனது பெயருக்கும் கிரையம் செய்து கொண்டார். இதுகுறித்து கே.அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி பிரிவில் வழக்குப் பதிந்து சதீஷ்குமார் மற்றும் பி.அசோக்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior