உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

உலக பொட்டாஷ் நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை இணைந்தும் நடத்தும் ஆய்வு

சிதம்பரம்:
 
               அண்ணாமலைப் பல்கலைக்கழக மண்ணியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை, சுவிட்சர்லாந்தில் உள்ள உலக பொட்டாஷ் நிறுவனத்துடன் இணைந்து  மஞ்சள் பயிரில் மகசூலை பெருக்க சாம்பல் சத்தின் முக்கியத்துவத்தை கணித்தல் குறித்து ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்காக உலக பொட்டாஷ் நிறுவனம் 3450 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளது. இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள முதுநிலை விரிவுரையாளர் முனைவர் பி.கே.கார்த்திகேயன் மற்றும் துறைத் தலைவர் மு.ரவிச்சந்திரன் ஆகியோருக்கு துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சி மூலம் தமிழ்நாட்டின் பல்வேறுபட்ட விவசாய நிலங்களில் சாம்பல் சத்து மூலம் மகசூலை பெருக்குவதற்கான முடிவுகளை அளிக்கவுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior