உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

கல்வியில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்: திருவள்ளுவர் பல்கலை., துணைவேந்தர் பேச்சு

குறிஞ்சிப்பாடி :

               கல்வி என்பது சமுதாயத்தின் பல இன்னலுக்கு அரு மருந்தாக உள்ளது என வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக துணை வேந்தர் பேசினார். குறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கல்லூரியில் 4ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் வரவேற்றார். ஜெயகணபதி கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக உறுப்பினர்கள் மோகன், சட்டநாதன், சுந்தரமூர்த்தி, ராஜாமணி, ராமலிங்கம், ராஜாராம், வைத்திலிங்கம், கணேசன், கிருபாகரன், கல்லூரி பேராசிரியர் வணங்காமுடி, சிண்டிகேட் உறுப்பினர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிய, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜோதிமுருகன் பேசியதாவது: 

                இந்த பட்டம் உங்கள் வாழ்க்கையின் முதல் படி. கல்வி என்பது சமுதாயத்தின் பல இன்னலுக்கு அரு மருந்தாக உள்ளது. கல்வி சமுதாய மாற் றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு காலத்தில் அரசு துறை, வங்கி துறைகளில் மட்டுமே பணி வாய்ப்புகள் இருந்தது. தற்போது இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கல்லூரி கல்வி மட்டும் தனியார் துறையில் பணியாற்ற போதாது. தனியார் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமையை மாணவர்கள் வளர்த்து கொண்டால், வேலை வாய்ப்புகளை அதிகம் பெறலாம். வேலை தேட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு வேலை கொடுக்க வேண்டும் என் பதை பற்றி சிந்தியுங் கள். கல்வி என்பதை முழுமையாக கற்று முடிக்க முடியாது. இந்த பட்டம் என் பது உங்கள் கல்வியின் முடிவு இல்லை. தொடக்கமாக எடுத்து கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் வெற்றி அடைய ஒரே ஆயுதம் தன்னம்பிக்கை. ஆசிரியர் கள் மாணவர்களுக்கு பாடத்துடன், தன்னம்பிக்கையும் சேர்த்து கற்பிக்க வேண்டும். இவ்வாறு துணைவேந்தர் ஜோதிமுருகன் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior