உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

மண் பாண்டம் செய்ய இலவசமாக மண் எடுக்க அனுமதி


பண்ருட்டி:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரியில் உள்ள களி மண்ணை இலவசமாக எடுத்துக்கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்டுக்கொண்டார். இந்திய தேசிய கிராம மற்றும் நகர தொழிலாளர் முன்னணி தமிழ்நாடு சார்பில் பண்ருட்டி தாலூகா முதல் மாநாடு புதன்கிழமை பண்ருட்டியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், இந்திய தேசிய கிராம மற்றும் நகர தொழிலாளர் முன்னணி தமிழ்நாடு காப்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்  கூறியது: 

                      தமிழகம் முழுவதும் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் சேர்ந்துள்ளனர். இளைஞர்களின் வருகையால் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது. ராகுல்காந்தி இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்தலில் நகர, வட்டார தலைவர்கள், மாநில மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் முறையாக தேர்வு செய்யப்படுவர். வரும் சட்ட மன்ற தேர்தலில் கூட்டணியா, தனித்தா? என்பதை பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும். இலங்கையில் அகதி முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னும் சொந்த மண்ணுக்கு அனுப்பப்படவில்லை. இவர்களை சொந்த மண்ணுக்கு அனுப்ப மத்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். அனைத்து கட்சியிலும் கோஷ்டி பூசல் உள்ளது. போட்டி என்று வரும் போது கோஷ்டி இருக்கத்தான் செய்யும்,  தமிழக மக்களின் பிரச்னைக்காக போராட்டம் நடத்த வேண்டும் என்று கார்த்தி ப.சிதம்பரம் கூறியதை வரவேற்கிறேன். பண்ருட்டி போன்ற சில நகராட்சிகள் பாதாள சாக்கடை திட்டம் வேண்டாம் என தவறான கொள்கையை வைத்துள்ளன. பாதாள சாக்கடை திட்டம் ஏற்பட்டால் கொசு இருக்காது மக்கள் சுகாதாரமாக வாழ முடியும். பண்ருட்டி ராமச்சந்திரன் அமைச்சராக இருந்த போது பண்ருட்டி வளர்ச்சி அடைந்ததுடன் சரி தற்போது கேட்பார் இன்றி கிடக்கின்றது என கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior