உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மார்ச் 20, 2010

மணல் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை



கடலூர்:

             கடலூர் மாவட்டத்தில் மணல் திருடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்தார்.

மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்து மாவட்ட ஆட்சியர்  பேசியது

                 மணல் திருட்டு கடுமையான குற்றமாகக் கருதப்படும். விவசாயிகள் தங்கள் சொந்த உபயோகத்துக்கு மணல் எடுப்பதாக இருந்தாலும் அரசிடம் அனுமதி பெற வேண்டும். மணல் திருட்டைக் கண்டுபிடிக்க  மாவட்ட அளவிலும், வட்ட அளவிலும் சிறப்புப் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.÷விவசாய மின் மோட்டார்களில் செப்புக் கம்பிகள் திருட்டு குறித்து அதிக புகார்கள் வந்தன. எனவே விவசாயிகளின் நலன் கருதி செப்புக் கம்பிகளைத் திருடுவோரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறை முடுக்கி விடப்பட்டது. அண்மையில் செப்புக் கம்பிகள் திருடிய 3 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 3 பேர் சாதாரண சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் 6 பேரைப் போலீஸôர் தேடி வருகிறார்கள். கடலூர் மாவட்டத்தில்தான் பல்வேறு குற்றங்களுக்காக அதிகமானோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு மற்றும் பாசிமுத்தான் ஓடைப் பகுதிகளில் தாமதமாக நடப்பட்ட நெல் பயிருக்கும், கான்சாகிப் வாய்க்கால் நவரைப்பட்ட நெல் பயிருக்கும் வீராணத்தில் இருந்தும், கொள்ளிடம் கீழணையில் இருந்தும் தண்ணீர் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். இதுகுறித்து  பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளரிடம் பேசி இருக்கிறேன்.÷பட்டா மாறுதல்கள், பெயர் மாற்றம் குறித்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பட்டா மாறுதல் மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, வட்டாட்சியர் அலுவலகங்களில் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம், விருத்தாசலம் நகராட்சிக் கழிவுகளால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.  மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலவலர் மணி, நபார்டு உதவிப் பொது மேலாளர் ராஜகோபால், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வெங்கடேசன், மத்தியக் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ந.மிருணாளினி  உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior