கடலூர் :
ரேஷன் கடையில் முறைகேடு செய்த விற்பனையாளர் இருவருக்கு தலா ஒரு ஆண்டு சிறையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கடலூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (37). இவர் கடந்த 97ம் ஆண்டு மஞ்சக்குப்பம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். 98ம் ஆண்டு இவரை இடம் மாற்றம் செய்தபோது ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 532 ரூபாய் பொருள் இருப்பு குறைவு கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்று மஞ்சக்குப்பம் ரேஷன் மெயின் கடை எண்.1ல் பணிபுரிந்த விற்பனையாளர் கணேசன் தனது பணிக்காலத்தில் 44 ஆயிரத்து 489 ரூபாய் பொருள் இருப்பு குறைவு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வணிகவியல் குற்றப்புலனாய்வு போலீசார், இருவர் மீது கடலூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரமேஷ், விற்பனையாளர்கள் விஜயகுமார் மற்றும் கணேசனுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக