உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

போலி உயில் தயாரித்து மோசடி தந்தை கைது; மகனுக்கு வலை

 கடலூர்: 

                      சிதம்பரத்தில் போலி உயில் தயாரித்து நில மோசடி செய்ய முயன்ற வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டார். மகனை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் பாண்டியன் (60). இவரது மகன் முருகன் (35). பாண்டியன் சகோதரர்கள் செல்வராஜ், லட்சுமணன், குமார் மற்றும் தாய் ஆண் டாள்.

                இவர்கள் அனைவரும், சிதம்பரம் செங்காட்டான் தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கிருஷ்ணசாமிக்கு (63) கடந்த 2004ம் ஆண்டு ஏப்.30ம் தேதி இரண்டு ஏக் கர் நிலத்தை 2 லட்சம் ரூபாய்க்கு கிரயம் எழுதிக் கொடுத்தனர். இந்நிலையில் பாண்டியன், முருகன் இருவரும் விற்ற இரண்டு ஏக்கர் நிலத்தை முருகனின் தாத்தா கணேசப்பிள்ளை, முருகன் பெயருக்கு உயில் எழுதி கொடுத்ததாக பொய்யான ஆவணம் தயார் செய் தனர். உயிலில் 1982ம் ஆண்டு வக் கீல் ராஜாமான் சிங் என்பவரின் கையெழுத்தை போட்டு, அவரது முத்திரையும் போலியாக தயாரித்து போலி உயிலை கிருஷ்ணசாமியிடம் கொடுத்து நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என தெரிவித்தனர். இதனையடுத்து கிருஷ்ணசாமி, வக்கீல் ராஜாமான் சிங்கிடம் விசாரித்தபோது உயிலில் உள்ள கையெழுத்து மற்றும் முத்திரை தன்னுடையது இல்லை என்று தெரிவித்தார்.

                          இது குறித்து கிருஷ்ணசாமி சிதம் ரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின் பேரில் போலீசாரிடம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத் தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினவேல், சப் இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், மகேஸ்வரி ஆகியோர் வழக் குப்பதிந்து நேற்று முன்தினம் பாண்டியனை கைது செய்து சிதம்பரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரது மகன் முருகனை தேடி வருகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior