உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

சுட்டெரிக்கும் கோடை வெயில்: மர்ம நோய் தாக்கி ஆடுகள் சாவு


கடலூர்:
 
                   சுட்டெரிக்கும் கோடை வெயில் மனிதனை மட்டுமன்றி, ஆடு மாடுகளையும் தாக்குகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கணிசமான அளவுக்கு ஆடுகள் இறந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.கடலூர் மாவட்டத்தில் சுமார் 32 ஆயிரம் மாடுகள், 80 ஆயிரம் வெள்ளாடுகள், 52 ஆயிரம் செம்மரி ஆடுகள் உள்ளன. ஆடு, மாடுகளுக்கு கோடைக்காலம் வந்துவிட்டால், கோமாரி நோய், அடைப்பான் நோய் மற்றும் குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரைக் குடிப்பதால் குடல் புழுக்கள் உருவாகி அதனால் நோய்களும் வருகின்றன. இதற்காக கடந்த 3 ஆண்டுகளாக கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுதடுப்பு ஊசிகள் போடப்பட்டு வருகின்றன. குடல் புழுக்களும் அகற்றப்பட்டு வருகின்றன. இதனால் கோமாரி, அடைப்பான் போன்ற நோய்கள் பெருமளவுக்குக் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக கால்நடை மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அதிக வெப்பம் காரணமாக ஆடுகளுக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளும் வருகின்றன. இதனால் ஆடுகள் இறப்பதற்கு அதிக வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கிறார்கள்.இந்த ஆண்டு கோடை வெயில் தொடங்கும் போதே வெப்பம் தகிக்கத் தொடங்கி விட்டது. இதனால் ஆடுகளுக்கு தோல் நோய் வேகமாகப் பரவி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
 
                       இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆடுகளுக்கு ரோமம் உதிர்ந்து விடுகிறது. வெயில் கடுமை காரணமாக இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆடுகளில் நூற்றுக்கு ஒரு ஆடு வீதம் மேய்ச்சலின்போது சுருண்டு விழுந்து, இறந்து விடுவதாக, கடலூர் மாவட்ட ஆடு வளர்க்கும் விவசாயிகள் கூறுகிறார்கள். வெயிலின் கடுமை அதிகரிக்கும்போது இறப்பு விகிதம் மேலும் அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் அச்சம் தெரிவிக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் முட்டம், பரங்கிப்பேட்டை, முட்லூர், திட்டக்குடி, வெள்ளப்பாக்கம் பகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட ஆடுகள், பெரும்பாலும் குட்டிகள் தோல்நோய் தாக்கி இறந்து இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தேவை தடுப்பூசி 
 
இதுபற்றி மாவட்ட விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.ரவீந்திரன் கூறுகையில், 
 
                      கோடை வெயில் கடுமையாக இருக்கிறது. மேய்ச்சலுக்குச் செல்லும் ஆடு, மாடுகளுக்குக் குடிக்கத் தண்ணீர் கிடைக்கவில்லை. வாய்க்கால்களில் தண்ணீர் இல்லை. குளம், குட்டைகளில் சிறிதளவு தேங்கிக் கிடக்கும் பாசிபடர்ந்த நீரைக்குடிக்கும் கால்நடைகளுக்கு பல்வேறு வியாதிகள் வருகின்றன. கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கால்நடைகள் இறந்து இருப்பதாக உழவர் மன்றத் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே கால்நடைகளுக்கு விரைவில் தடுப்பு ஊசிபோட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 
இதுகுறித்து கால்நடைத்துறை இணை இயக்குநர் இளங்கோ கூறுகையில்
 
                  ""வெயில் கடுமை தாங்காமல் இத்தகைய தோல் நோய்கள் ஆடுகளுக்கு வருவது உண்டு. ஆனால், இயற்கையாகவே நோய் குணாகி விடும். இறப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் இதுகுறித்து நோய் புலனாய்வுப் பிரிவு மூலம் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
 
3 லட்சம் டோஸ் நோய் புலனாய்வுப் பிரிவு உதவி இயக்குநர் நடேசன் கூறுகையில், 
 
                   ""கோடை வெயில் அதிகரித்து ஆடு, மாடுகள் குட்டைகளில் தேங்கிக் கிடக்கும் நீரைக் குடிக்க நேரிடுவதால் பல நோய்கள் வருகின்றன. தோல் நோய் பெரும்பாலும் தானாகவே குணமாகிவிடும். கோடைக் காலத்தில் கால்நடைகளுக்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்த, கடலூர் மாவட்டத்துக்கு 3 லட்சம் டோஸ் தடுப்பு ஊசி மருந்து வர இருக்கிறது. விரைவில் முகாம்கள் நடத்தி தடுப்பூசி போடப்படும்'' என்றார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior