கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மசூதிக்கு முஸ்லிம் பெண் வந்ததால் ஏற்பட்ட தகராறில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். மோதலைத் தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது.
கடலூர் முதுநகரைச் சேர்ந்தவர் முகமது யூனிஸ். இவர் நேற்று மாலை 6 மணிக்கு மோட்டார் பைக் கில் தனது மனைவி பஷீரியாவுடன் புதுச்சேரிக்கு சென்றார். மஞ்சக்குப்பம் மசூதி அருகே வந்த போது 6.30 மணி தொழுகைக்கான அழைப்பு வெளியானது. யூனிஸ் மனைவியை மசூதியின் வெளியில் நிற்க வைத்து மசூதிக்குள் தொழுகைக்கு சென்றார். அப்போது தொழுகை முடிந்து வெளியே வந்த மஞ்சக்குப்பத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் யூனிஸ் மனைவியை பார்த்து எப்படி மசூதிக்கு வரலாம் எனக்கேட்டு சரமாரியாக திட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த பஷீரியா கணவர் யூனிஸ் வந்ததும் நடந்த விவரங்களை தெரிவித்தார். இதுபற்றி தகவல் அறிந்த முதுநகரைச் சேர்ந்த ஜாபர் உள்ளிட்ட நான்கு பேர் மஞ்சக்குப்பம் மசூதிக்குச் சென்று நியாயம் கேட்டனர். இதில் ஏற்பட்ட தகராறில் மசூதியைச் சேர்ந்தவர்கள், ஜாபர் உள்ளிட்ட நான்கு பேரையும் சரமாரியாக தாக்கினர். இதில் ஜாபர் படுகாயமடைந்தார். கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்.பி., ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற் கொண்டனர். மேலும் அமானுல்லா உள்ளிட்ட 5 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மஞ்சக்குப்பம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக