உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஏப்ரல் 24, 2010

படாத பாடுபடும் பண்ருட்டி பாதசாரிகள்


பண்ருட்டி கடலூர் சாலையில் கடைக்காரர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நடைபாதையும், சாலையில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களும்.
பண்ருட்டி:
 
                பண்ருட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நான்கு முனை சந்திப்பில் இருந்து பஸ் நிலையம் வரையிலுமான கடலூர் சாலையின் இரு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை அப்பகுதியைச் சேர்ந்த கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.
 
                        பண்ருட்டியில் அதிக அளவு மக்கள் வசிப்பதாலும்,சுற்றுப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமத்தினர் தங்கள் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்ள பண்ருட்டி வந்து செல்வதாலும் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகளில் பலர் இறந்தும், காயம் அடைந்தும் பாதிக்கப்படுகின்றனர்.
 
                     இதனால் விபத்தில் இருந்து பொது மக்களை காக்க, நான்கு முனை சந்திப்பில் இருந்து பஸ் வெளியில் வரும் வழி வரையிலான கடலூர் சாலையின் இரு பக்கத்திலும் நடைபாதை அமைத்து தர வேண்டும் என, 7 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய நகர்மன்றத் தலைவரான பஞ்சவர்ணமும், நகர்மன்ற உறுப்பினர்களும் ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்ற அப்போதைய மாவட்ட ஆட்சியர் ககன்தீப்சிங்பேடி நடைபாதை அமைக்க ஆட்சியர் நிதியில் இருந்து ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.பாதசாரிகள் விபத்தில் சிக்காமல் நடந்து செல்லவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும் அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது வியாபாரிகளின் பிடியில் சிக்கியுள்ளது.மேலும் கடைக்கு முன்னர் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 
 
                       இதனால் குறுகிப் போன சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே நடந்து செல்லும்பொது மக்கள் விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். பொது மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட நடைபாதை. தற்போது கடைக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மேற்கண்ட சாலையில் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதையெல்லாம் அறிந்திருந்தும் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டிய அரசு அதிகாரிகளும், போக்குவரத்தை சீர்செய்ய வேண்டிய போக்குவரத்து காவலர்களும் எந்தவித நடவடிக்கையும் எடுக்ககாமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior