விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் வெள்ளிக்கிழமை புதிய ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் நிலைய மேலாளர் பாலகிருஷ்ணன்.
4 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விழுப்புரம்-மயிலாடுதுறை இடையேயான ரயில் போக்குவரத்து வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே 122 கி.மீ. தூரத்தில் ரூ.270 கோடியில் அகல ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்க 2006 டிசம்பர் 1-ம் தேதி முதல் ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணிகள் 2007-ம் ஆண்டு தொடங்கியது.நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்த இப்பணிகள் நிறைவடைந்து ஆய்வுப் பணிகள் முடிந்தன. இருப்பினும் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் வழக்குரைஞர் ராஜேந்திரன் தொடுத்த பொது நல வழக்கில் மார்ச் 23-ம் தேதி 4 வாரங்களில் ரயில்களை இயக்குவதாக ரயில்வே நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த காலக்கெடு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் ரயில் இயக்கப்படுமா, இயக்கப்படாதா என்ற நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் அதிகாரபூர்வமாக ரயில் இயக்கப்படுவது அறிவிக்கப்பட்டது. இதையொட்டி மாலை 6.20 மணிக்கு தென்னக ரயில்வே கூடுதல் பொமேலாளர் பி.கே. ரெட்டி முன்னிலையில் விழுப்புரம் ரயில்நிலைய அலுவலர் கே. பாலகிருஷ்ணன் கொடியசைத்து ரயிலை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே அகல ரயில் பாதையில், நேற்று மாலை முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிவடைந்து, நேற்று மாலை முதல் ரயில் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே முதல் ரயில் நேற்று மாலை இயக்கப்பட்டது. இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.10 மணிக்கு மயிலாடுதுறை சென்றடைந்தது. இன்று முதல் இப்பாதையில் தினசரி மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே மூன்று பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரத்திற்கு பாசஞ்சர் ரயில் காலை 5.30, மாலை 6 மணிக்கு இயக்கப்படும். விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு காலை 6.10 மணிக்கும், மாலை 6 மணிக்கும் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து நாகூருக்கு மயிலாடுதுறை - தஞ்சை வழியாக இன்று முதல் தினசரி நாகூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (எண்.6175) சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு நாகூர் சென்றடையும். நாகூரிலிருந்து நாளை (25ம் தேதி) முதல் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்.6176) இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு, அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக