என்.ஐ.டி., உள்ளிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத்தேர்வு, 86 நகரங்களில் நாளை நடக்கிறது. என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி.எம்., - ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் பி.இ.,- பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் ஆகிய படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஏ.ஐ.இ.இ.இ., நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடக்கிறது. நாளை காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரையும் இரண்டு தாள்கள் தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், கணிதம், ஆப்டிட்யூட், டிராயிங் ஆகிய பகுதிகளில் கேள்விகள் கேட்கப்படும். தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களிலும், வெளிநாடுகளில் துபாய் மற்றும் ரியாத்திலும் இத்தேர்வு நடக்கிறது. மொத்தம் 86 நகரங்களில் ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு நடக்கிறது. இத்தேர்வு முடிவு, ஜூன் 7ம் தேதி வெளியிடப்படும். கடந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டும், அதே அளவு மாணவர்கள் ஏ.ஐ.இ.இ.இ., தேர்வில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக