கடலூர் :
கடலூர் மாவட்டத்தில் 237 புதுச்சேரி மாநில பதிவு எண் வாகனங்கள் பிடிபட்டதன் மூலம் 7 லட்சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தமிழகத்தில் ஓட்ட வேண்டுமெனில் வாகன தொகையில் 8 சதவீதம் சாலை வரியாக அரசுக்கு செலுத்த வேண்டும். இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் சாலை வரி கட்டாமல் புதுச்சேரி மாநில பதிவு பெற்ற ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதாக கிடைத்த தகவலின் கடந்த 3ம் தேதி முதல் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி உட்பட 10 இடங்களில் வட்டார போக்குவரத்து, மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் நேற்று முன்தினம் வரை இரண்டு கார்கள் உட்பட 237 வாகனங்கள் பிடிபட்டன. அதன் மூலம் 7 லட் சத்து 6 ஆயிரத்து 434 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
பொது அறிவிற்கு:
தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் - மகாத்மா காந்தி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக