கடலூர் :
கடலூரில் மென்பொருள் பூங்கா அமைத்தர வேண்டும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் சட்ட சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்ட சபையில் மின் துறை மானிய கோரிக்கையின் போது எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் 1998ம் ஆண்டு 8 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் கீழ்பவானி புனல் மின் திட்டமும், 1999ம் ஆண்டு 196 மெகாவாட் பேசின் பாலம் டீசல் எஞ்சின் மின் திட்டமும் துவங்கப்பட்டது. அதே ஆண்டு 5.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சாத்தனூர் புனல் மின் திட்டமும், 2000ம் ஆண்டு 700 மெகாவாட் முக்குருத்தி சிறு புனல் மின் திட்டம் என 942 கோடி ரூபாய் மதிப்பில் 244 மெகாவாட் திறன்கொண்ட 6 மின் உற்பத்தி திட்டங்கள் துவக்கப்பட்டன. கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்கும் போதெல்லாம் மின் உற்பத்தி செய்வதற்கான அடித்தளங்களை அமைக்கிறார். கடலூர் தொகுதி மிகவும் பிற்பட்ட தொகுதியாகும். எந்த தொழிற்சாலைகளும் இல்லை. முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கடலூரில் மென்பெருள் பூங்கா அமைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கடலூர் பகுதியில் மேலும் ஒரு புதிய பஸ் ஸ்டாண்டை உருவாக்க வேண்டும்.
கடலூர் புறவழிச் சாலைகளுக்கு திட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அறிவித்தார். இதற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டு, அந்த பணியை விரைந்து முடிந்து கடலூர் மக்களின் தேவைகளை உடனடியாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எம்.எல்.ஏ., அய்யப்பன் பேசினார்.
பொது அறிவிற்கு:
ஹான்ட் பிளானெட் என்பது - வெள்ளி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக