சிதம்பரம் :
தொட்டு விடும் தூரத்தில் ஒரு ஆண்டாக தாழ்வாக தொங்கிய மின் கம்பி தினமலர் செய்தி எதிரொலியால் ஒரே நாளில் சரி செய்யப்பட்டது.
சிதம்பரம் அடுத்த கவரப்பட்டு கிராமத்தில் வயல்வெளி வழியாக செல்லும் மின் கம்பி மிகவும் தாழ்வாக தொட்டுவிடும் தூரத்தில் ஒரு ஆண்டாக தொங்கியது. இதனால் வயல்வெளிக்கு செல்லும் மக்கள் அச்சத்துடனே சென்று வந்தனர். செயற் பொறியாளர் செல்வசேகர் அதிரடி நடவடிக்கையால் நேற்று ஒரே நாளில் புதிய மின் கம்பம் நடப்பட்டு, தாழ்வாக இருந்து மின் கம்பி சரி செய்யப்பட்டது. 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பொது அறிவிற்கு:
நிலவின் விட்டம் - 3475 கி.மீ.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக