உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

ரூ.1 லட்சம் நிர்ணயித்தாலும் கட்டணம் செலுத்த தயாராக உள்ளோம்: பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர்






நெய்வேலி:

                  அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதல் கட்டண அறிவிப்பு வெளியிட்ட பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திபோது, அங்குவந்த பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவர் எழிலரசியின் கணவர் ரவிச்சந்திரன் பள்ளிக்கு ஆதரவாக குரல் கொடுத்து, "பள்ளியின் தரம் வியக்கவைக்கும் வகையில் உள்ளது. எனவே இப்பள்ளிக்கு கட்டணமாக ரூ.1 லட்சம் நிர்ணயித்தாலும் நான் செலுத்தத் தயாராக இருக்கிறேன்' எனக் கூறினார். 

                      இதைக்கேட்ட பெற்றோர்கள் அதிருப்தியடைந்தனர். இதையடுத்து பெற்றோர்கள் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை கட்டத் தயாராக உள்ளோம். அதே நேரத்தில் பள்ளி நிர்வாகம் மேல்முறையீடு செய்திருந்து, அதன்படி கட்டணம் அதிகரிக்கும் பட்சத்தில் அக்கட்டணத்தை வழங்க தயாராக இருக்கிறோம். எனவே அரசியல் பிரமுகர்கள் இவ்விஷயத்தில் தலையிட வேண்டாம் என கோரிக்கை வைத்தனர்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் துவக்க ஏற்பாடு: 

                      அண்மைக் காலமாக பள்ளி நிர்வாகம் ஒரு சில முடிவுகளை தன்னிச்சையாக எடுத்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனவே இனி பள்ளி நிர்வாகம் எவ்விதமான முடிவுகளை மேற்கொள்ளவேண்டுமானால், பெற்றோர்களை கலந்தாலோசித்து எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தினர். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பள்ளி எதிரில் வரும் 10-ம் தேதி நடைபெறும் என பெற்றோர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior