உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

பஸ் நிறுத்த நிழற்குடைக்கு பரிதவிக்கும் கடலூர் நகரம்




பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்களால் அடைபட்டுக் கிடக்கும், கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அரசு மருத்துவமனையின் எத
 
கடலூர்:
 
               பழைமை வாய்ந்த கடலூர் நகரம், அடிப்படை வசதிகள் இன்றி தற்போது பழம் பாய் போல் சிதைந்து கிடக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள்தான் பெயர் சொல்லிக் கொண்டு இருக்கின்றன. 
 
                      4 ஆண்டுகளுக்கு முன் நமக்கு நாமே திட்டத்தில் நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் அமைக்கப்பட்ட செயற்கை நீரூற்றுகள், பூங்காக்கள், பஸ் நிறுத்த நிழற்குடைகள் எல்லாம் வரலாற்றுச் சின்னங்களாக சிதைந்து கிடக்கின்றன. நகரெங்கும் அடைபட்ட சாக்கடைகள், எரியாத தெரு விளக்குகள், குப்பை வாராத தெருக்கள், மண் மேடுகள் அகற்றப்படாத பாலங்கள் இவைதான், இந்த மாவட்டத் தலைநகரான கடலூர் நகரக் காட்சிகள். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பார்கள். ஆனால் இப்போதோ கடலூர் தேய்கிறது, விழுப்புரம் வளர்கிறது என்பதுதான் புதுமொழி. அரசியல் மனமாச்சரியங்களை முன்னிறுத்தி, மக்கள் நலத்திட்டங்களை பின்னுக்குத் தள்ளும் அரசியல் தலைமைகளை கடலூரிலன்றி வேறெங்கும் காண முடியாது. அத்துடன் ஆமை வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால், சாலைகள் நீண்டகாலமாக நார்நாராக் கிழிந்து கிடக்கும் அவலநிலை, குடிநீர் விநியோகத்தில் கோளாறுகள், நிதிப் பற்றாக்குறையால் நகராட்சி, திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம், அத்தியாவசியத் தேவையான ரயில்வே சுரங்கப்பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதில், பொதுமக்கள் நலனா வணிகர்களின் நலனா என்பதில் முடிவுக்கு வர முடியாமல் தவிக்கும் நகராட்சி, இவற்றின் விளைவாக கடலூர் நகரம், 15 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டு கிடக்கிறது என்பது நடுநிலையாளர்களின் கருத்து.இவற்றை எல்லாம் நிறைவேற்ற, நிர்வாகத்தை முடுக்கி விடும் சக்திஏதும் இல்லாததுதான், கடலூர் மக்களின் துரதிருஷ்டம். பணம் இருந்தால்தான் இன்று அரசியல் நடத்த முடியும், தேர்தலைச் சந்திக்க முடியும் என்பது ஊரறிந்த உண்மை. பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில் மக்கள் பணிகளையும் முன்னின்று நிறைவேற்றுவோர்தான் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த இரண்டில் எது இல்லை என்றாலும், மக்கள் மனதில் இருந்து மறைந்து போவார்கள் என்பதைக் கடலூர் மக்கள் பிரதிநிதிகள் எண்ணிப் பார்த்ததாகத் தெரியவில்லை.
 
                இதன் விளைவு கடலூரில் பஸ் நிறுத்த நிழற்குடைகள்கூட முறையாக இல்லை. கடலூர் டவுன்ஹால் அருகே பல்லாண்டுகளாக இருந்த பஸ் நிழற்குடை, சாலை விரிவாக்கத்துக்காக உடைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்குமேல் ஆயிற்று.  இங்கு எப்போதும் நூற்றுக்கணக்கில் பயணிகள் தகிக்கும் வெயில் தவிக்கும் நிலை உள்ளது.  இங்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எந்த நிர்வாகத்துக்கும் ஏற்படாததும், யாரும் அதுபற்றி கேள்வி எழுப்பாததும்தான் இங்குள்ள பரிதாபநிலை. 
 
அண்மையில் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன், கடலூர் நகராட்சி ஆணையரிடம் பேசுகையில், 
 
                  நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் நிழற்குடை போன்றவற்றை அமைத்துத் தரத் தயாராக உள்ளன. அதை நகராட்சி ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியபோது, ஆணையரால் ஏனோ பதில் சொல்ல முடியவில்லை. அரசு பொது மருத்துவமனை அருகில், மிகப்பெரிய நினைவஞ்சலி டிஜிட்டல் பேனர்களை எல்லாம் அனுமதித்து இருக்கிறீர்களே, அங்குவரும் நோயாளிகளின் மன நிலையை எண்ணிப் பார்த்தீர்களா அவற்றை உடனே அகற்றுங்கள் என்று, மாவட்ட ஆட்சியர் கடுமையாகப் பேசியபோதும், ஆணையரின் பதில் மெனம்தான்.  அரசு மருத்துவமனை சவக்கிடங்கு அருகில், நவீன பஸ் நிறுத்த நிழற்குடை விளம்பரதாரர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தைத் தேர்வு செய்து அளித்தது யார் என்றே தெரியவில்லை. அதையும் மக்கள் பயன்படுத்த முடியாமல், பாதாளச் சாக்கடைத் திட்டக் குழாய்களைப் போட்டு அடைத்திருப்பதும், அரசு நிர்வாகங்களின் அலட்சியத்தைப் பறைசாற்றுவதாக அல்லாமல் வெறெதுவாக இருக்க முடியும்?




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior