உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

பள்ளிகளுக்கான கட்டணப் பிரச்னைக்கு முதல்வர் தீர்வு காண வலியுறுத்தல்



சிதம்பரம்:

                  தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விஷயத்தில் முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வுகாண வேண்டும் என காமராஜ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காமராஜ் கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் மேலவை உறுப்பினருமான சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்திருப்பது: 
                         
                       தமிழகத்தில் உள்ள சுமார் 11 ஆயிரம் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளின் கட்டண நிர்ணயம் சம்பந்தமாக இன்னமும் குழப்ப நிலை நீடிக்கிறது. பள்ளிகள் தொடங்கும் இந்த கட்டத்திலும் கல்விக் கட்டணப் பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதால் பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர், ஆசிரியர்களிடையே குழப்ப நிலை நீடிக்கிறது.நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தை வைத்து பள்ளிகளை நடத்த முடியாத நிலையும், பள்ளிகளை முடக்கப்பட வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. 

                        ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும், அவர்களின் ஊதியமும் குறைக்கப்பட வேண்டிய நிர்பந்தம் வந்துள்ளதால் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். அண்மையில் வெளியாகிய 12-ம் வகுப்பு மற்றும் மெட்ரிக் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த மதிப்பெண்களை மெட்ரிக் பள்ளி மாணவர்களே குவித்திருப்பது மெட்ரிக் பள்ளிகளின் கல்வித் தரத்தை நிரூபித்துள்ளது. இப்பள்ளிகளில் உள்ள கல்வித்தரம் மற்றும் மாணவர் ஒழுங்கு-கட்டுப்பாடு திருப்திகரமாக இருப்பதால்தான் பெற்றோர்கள் செலவைப் பற்றி பொருட்படுத்தாமல் தாங்களே விரும்பி மெட்ரிக் பள்ளிகளை நாடுகிறார்கள்.

3 தீர்வுகள்:

                இப்பிரச்னையைத் தீர்க்க இரு சுலபமான வழிகள் உள்ளன. ஒன்று சென்ற ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்க அனுமதி தந்து அடுத்த ஆண்டு முதல் என்ன கட்டணம் நிர்ணயிப்பது என நிதானமாக ஆய்வு செய்து முடிவெடுக்கலாம். 

                 மற்றொன்று 11 ஆயிரம் பள்ளிகளில் பணியாற்று ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, உதவிபெறும் தனியார் பள்ளிகளைப் போல ஊதியத்தை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த இருவழிகளும் சாத்தியப்படாவிட்டால் தமிழக அரசே இப்பள்ளிகளை ஏற்று நடத்த முன்வர வேண்டும் என சி.ஆர்.லட்சுமிகாந்தன் தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior