உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

தலைமை ஆசிரியர் யார்? போட்டா போட்டி டி.இ.ஓ., விசாரணைக்குப் பின் தற்காலிக தீர்வு

விருத்தாசலம் : 

                விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என இரண்டு நாட்களாக நீடித்த குழப் பத்திற்கு டி.இ.ஓ., விசாரணைக்கு பின் நேற்று தற்காலிக தீர்வு ஏற்பட்டது.

                 விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த உதவித் தலைமை ஆசிரியர் முருகேசன் 10 மாதங்களுக்கு முன் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு இடமாறுதலில் சென்றார். இதற்கிடையே முருகேசன் திடீரென நேற்று முன் தினம் காலை விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து தனக்கு மனமொத்த மாறுதலுக்கான ஆணை வந்திருப்பதாக வருகை பதிவேட்டில் கையெழுத்திட பள்ளிக்கு வந்தார். ஆனால், இது குறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை என கூறி தற்போது பணியில் உள்ள தலைமை ஆசிரியர் பிரகாசம் வருகை பதிவேட்டை எடுத்து பூட்டி வைத்து விட்டார். 

                  இதனால் பள்ளிக்கு யார் தலைமை ஆசிரியர் என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முருகேசன் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட மீண்டும் பள்ளிக்கு வந்தார். நேற்றும் தலைமை ஆசிரியர் பிரகாசம் தனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறி தடுத்தார்.தலைமை ஆசிரியர்களுக்குள் மீண்டும் பிரச்சனை தலை தூக்குவதை அறிந்த டி.இ.ஓ., குருநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தி இருவரிடமும் விளக்க கடிதம் பெற் றுக் கொண்டு "சி.இ.ஓ., பள்ளி கல்வி இயக்குனரிடம் பேசி பின்னர் முடிவு கூறுவார். அதுவரை நீங்கள் பள்ளிக்கு வரவேண்டாம்' என முருகேசனிடம் கூறினார். அதனையடுத்து முருகேசன் பள்ளியை விட்டு சென்றார். இதனால் 2 நாட்களாக நீடித்த குழப்பத் திற்கு தற்காலிக தீர்வு காணப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior