உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 05, 2010

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அநாகரிகமாகப் பேசியதாக பா.ம.க.வினர் மீது புகார்



கடலூர்:

              விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை அநாகரிகமாகப் பேசியதாக பா.ம.க.வினர் மீது, காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகார் கொடுக்கப்பட்டது. 

                 கடலூர் முதுநகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருமணத்துக்கு, பண்ருட்டி எம்.எல்.ஏ.வும், பா.ம.க. அமைப்புச் செயலாளருமான தி.வேல்முருகன் வந்தார். அவரை வரவேற்க காலை 8 மணி அளவில் பா.மக.வினர் திருமண மண்டபம் எதிரில் திரளாக நின்று இருந்தனர். 

               குள்ளஞ்சாவடியில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றில் பங்கேற்பதற்காக, கடலூர் நகராட்சி துணைத் தலைவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தை எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலாளருமான தாமரைச்செல்வன், காரில் அந்த வழியாகச் சென்றார். அவருடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சென்றனர். காரை விட்டு இறங்கிய தாமரைச்செல்வன், அங்கிருந்த நகராட்சி பா.ம.க. உறுப்பினர் உள்ளிட்டோருக்கு வணக்கம் செலுத்திவிட்டு புறப்படத் தயாரானார். 

               அப்போது பா.ம.க.வைச் சேர்ந்த சிலர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை கேலி செய்து, அநாகரிகமான வார்த்தைகளைப் பேசினராம். எனினும் தாமரைச்செல்வன் அங்கிருந்து சென்றுவிட்டார். இப்பிரச்சினை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சினர் கடலூர் முதுநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் சொக்கு என்ற புகழேந்தி, முதுநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸôர், சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்தனர். விசாரணை நடந்து வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior