சிதம்பரம்:
திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை தடுக்க சிதம்பரத்தில் போலீஸர் மற்றும் அடகுகடை, வட்டிக்கடை உரிமையாளர்கள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டிஎஸ்பி மா.மூவேந்தன் தலைமை வகித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பி.சுப்பிரமணியன், அறிவானந்தம், ஜி.சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதிவாணன், கண்ணுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முடிவுகள்:
பாதுகாப்பு பெட்டக்தில் நகைகளை பத்திரமாக வைப்பது, அடகுகடை மற்றும் வட்டிக்கடைகளுக்கு இரவு காவலாளிகள் நியமிப்பது, பணம் அதிகமாக இருந்தால் அவ்வங்கியில் ஊழியர் ஒருவரை தங்கவைப்பது, அடையாளம் தெரியாத நபர்களிடம் நகைகளை அடமானம் செய்வதை தவிர்ப்பது என்று இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக