கடலூர் :
கடலூரில் பாரபட்சமாக ஆக்கிரமிப்பை அகற்றியதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
கடலூர் மஞ்சக்குப்பம் கருமாரபேட்டைத் தெருவில் சிமென்ட் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்தது. பாதி சாலை முடிந்த நிலையில் மீதமுள்ள பகுதியை ஆக்கிரமித்து குடிசை போட்டிருந்ததால் சாலை போடும் பணி ஒரு ஆண்டாக கிடப்பில் போடப் பட்டது. கவுன்சிலர் ராஜ் மோகன் மற்றும் வார்டு பொதுமக்கள் கலெக்டர் மற்றும் நகராட்சி சேர்மன் ஆகியோரை சந்தித்து ஆக்கிரமிப்பை அகற்றி சிமென்ட் சாலை பணியை முடிக்க வேண்டும் என மனு கொடுத்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று நகராட்சி அதிகாரிகள் கருமாரபேட்டைத் தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சி பிரமுகருக்கு வேண்டிய ஒருவரின் வீட்டை பிரிக்காமல் மற்ற வீடுகளை பிரித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாரபட்சம் இன்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண் டும் என திரண்டு தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் அந்த தெருவில் சிமென்ட் சாலை பணி நிறைவடைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக